போலியோ பாதித்த இளைஞர் தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம்
போலியோ பாதித்த இளைஞர் தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம்
போலியோ பாதித்த இளைஞர் தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம்
ADDED : ஆக 05, 2010 11:21 PM
திருக்கோவிலூர்: பீகாரைச் சேர்ந்த போலியோ பாதித்த இளைஞர், மூன்று சக்கர சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
இவர், திருக்கோவிலூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் அரவிந்த குமார் மிஸ்ரா(33). பட்டதாரியான இவரது இரண்டு கால்களும் போலியோ பாதிப்பால் செயலிழந்துள்ளது. பொதுமக்களிடம் போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாக்கவும் தென் மாநிலங்களில் இவர் மூன்று சக்கர சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு நவம்பரில் பாட்னாவில் இருந்து பயணத்தை துவங்கி, ஒரிசா, சத்திஸ்கர், ஆந்திர மாநிலங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகிறார். அரவிந்தகுமார் மிஸ்ரா கூறுகையில், 'போலியோ பாதிப்பை பொதுமக்கள் உணர வேண்டும். போலியோ தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்தவே சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது. இதை மன ரீதியாக எதிர்கொண்டால் உடல் பாதிப்பு ஒரு பொருட்டே கிடையாது. புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து கொச்சியில் பயணத்தை முடிக்க உள்ளேன்' என்றார்.