Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மாவோயிஸ்டுகளுக்கு மறுவாழ்வு : மே.வங்கத்தில் புதுத்திட்டம்

மாவோயிஸ்டுகளுக்கு மறுவாழ்வு : மே.வங்கத்தில் புதுத்திட்டம்

மாவோயிஸ்டுகளுக்கு மறுவாழ்வு : மே.வங்கத்தில் புதுத்திட்டம்

மாவோயிஸ்டுகளுக்கு மறுவாழ்வு : மே.வங்கத்தில் புதுத்திட்டம்

ADDED : ஜூலை 29, 2010 11:41 AM


Google News

கோல்கட்டா : ஆயுதங்களை ஒப்படைத்து மனம் திருந்தி சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் புதிய திட்டம் மேற்குவங்க மாநிலம் அமல் படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே மாவோயிஸ்டுகளை ஒடுக்க புது வியூகங்களை வகுத்து வரும் அரசு, மறுவாழ்வு திட்டத்தையும் அறிவித்துள்ளது. ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு அவர்கள் ஒப்படைக்கும் ஆயுதங்களுக்கு ஏற்ப உதவித் தொகை அளிக்கப்படும். இது தவிர அவர்களது பெயரில் வங்கி கணக்கு ஆரம்பித்து அதில் ரூ. 1.5 லட்சம் டெபாசிட் செய்யப்படுகிறது. 3 ஆண்டுகள் வரை சரணடைந்தவர்கள் நல்ல முறையில் வாழ்ந்தால் அவர்களுக்கு அந்தப் பணம் திரும்பத் தரப்படும். மேலும் அதுவரை மாதந்தோறும் ரூ. 2000 பணமும் உதவித் தொகையாக அளிக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us