திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள் : சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம்
திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள் : சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம்
திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள் : சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம்

ஐதராபாத் : திருப்பதி தேவஸ்தான முறைகேடுகளைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில், திருப்பதியில் நாளை தர்ணா போராட்டம் நடக்கிறது.
ஊழல் புகாரில் சிக்கியுள்ள திருப்பதி தேவஸ்தானத்தைக் கண்டித்து, திருப்பதியில் உள்ள அதன் அலுவலகம் எதிரில் நாளை தர்ணா போராட்டம் நடத்துகிறார். இதில், அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொள்கின்றனர். தர்ணா போராட்டம் முடிந்தவுடன் சந்திரபாபு நாயுடு மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நாளை பிற்பகல் திருப்பதி அடிவாரத்திலிருந்து மலைப்பாதை வழியாக திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரை மேற்கொள்கின்றனர். பின்னர், ஏழுமலையானை தரிசனம் செய்யும் அவர்கள், ஊழல் மலிந்துவிட்ட தேவஸ்தானத்தை சுத்தப்படுத்துமாறு வேண்டிக் கொள்கின்றனர்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது : திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. கிருஷ்ணதேவராயர் காலத்தில் வழங்கப்பட்ட தங்க நகைகள் மாயமாகி விட்டன. சாமி தரிசன டிக்கெட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. சில சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டன. இதுபோன்று தேவஸ்தானம் சட்டத்திற்கு புறம்பாக பல முறைகேடுகளை செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து கடந்த ஆறு ஆண்டுகளில் திருப்பதி தேவஸ்தானம், ஊழல் மலிந்த இடமாக மாறிவிட்டது. ஆதிகேசவலு தலைமையிலான திருப்பதி தேவஸ்தான போர்டை அரசு உடனடியாகக் கலைக்க வேண்டும். தேவஸ்தானத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். நான் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன், மாணவப் பருவத்தில் திருப்பதி கோவிலுக்கு பாத யாத்திரை சென்றேன். அதன் பின், தற்போது தான் பாத யாத்திரை செல்கிறேன்.