நூலக இயக்குனரை கண்டித்து விடுப்பு போராட்டம்
நூலக இயக்குனரை கண்டித்து விடுப்பு போராட்டம்
நூலக இயக்குனரை கண்டித்து விடுப்பு போராட்டம்
ADDED : ஆக 05, 2010 11:30 PM
தேனி: நூலக இயக்குனரை கண்டித்து, நூலக பணியாளர்கள் இன்று முதல் மாநில அளவில் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.
அரசு பொது நூலகத்துறை அலுவலக பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் நடந்தது. மாநில தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். செயலர் கதிரேசன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் அறிவரசுபாண்டியன் மீது பொறுப்பு நூலக அலுவலர் ஜெகதீசனை தூண்டி விட்டு போலீசில் பொய் புகார் அளித்து பணியாளர்களின் பணிப்பாதுகாப்பை பறிக்க முயற்சி செய்யும் நூலக இயக்குனர் அறிவொளியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நூலகங்களில் ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ள கண்காணிப்பாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பாமல் காலம் கடத்தும் இயக்குனர் அறிவொளியை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் அலுவலக பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.