UPDATED : ஜூலை 11, 2011 12:00 AM
ADDED : ஜூலை 11, 2011 03:46 PM
பஞ்சாப் நேஷனல் வங்கி என்னும் பாங்க் தான் பி.என்.பி., என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதற்கு நாடு தழுவிய கிளைகள் உள்ளன. முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட சேவைகளால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை செய்து வரும் பி.என்.பி.,யில் மேலாளர், துணை மேலாளர், மார்க்கெடிங் மற்றும் எச்.ஆர்.டி.,பிரிவுகளில் அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்னென்ன பிரிவுகள்
மேனேஜர் (கிரெடிட்) பிரிவில் 10 இடங்களும், டெபுடி மேனேஜர் (ஐ.டி.,) பிரிவில் 202 இடங்களும், ஆபிசர் மார்க்கெடிங் பிரிவில் 104 இடங்களும், ஆபிசர் எச்.ஆர்.டி., பிரிவில் 20 இடங்களும் காலியாக உள்ளன.
வயது வரம்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அடிப்படை தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் மேனேஜர் (கிரெடிட்) பிரிவிற்கு விண்ணப்பிக்க 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். டெபுடி மேனேஜர்(ஐ.டி.,), ஆபிசர்மார்க்கெடிங், ஆபிசர்எச்.ஆர்.டி., ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எப்.ஏ., நிதிப் பிரிவு எம்.பி.ஏ., ஆகியவற்றை முடித்தவர்கள் மேனேஜர் (கிரெடிட்) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.சி.ஏ., அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்தவர்கள் டெபுடி மேனேஜர் (ஐ.டி.,) பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம்.
மார்க்கெடிங்கில் எம்.பி.ஏ., முடித்தவர்கள் ஆபிசர்மார்க்கெடிங் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பை முடித்தபின் பெர்சானல் மேனேஜ்மெண்ட், இண்டஸ்ட்ரியல் ரிலேசன்ஸ், லேபர் லா, லேபர் வெல்பேர், சோசியல் ஒர்க் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் ஆபிசர்எச்.ஆர்.டி., பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரி பணி இடங்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, டில்லி, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மையத்தை தேர்ந்தெடுப்பவர்கள் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரி பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.400/ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை இந்த வங்கியின் இணைய தளத்திலிருந்து டவுண்லோடு செய்யப்பட்ட சலானின் மூலமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.50/ மட்டும் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை ஏதாவது ஒரு பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் மட்டுமே செலுத்த வேண்டும். கட்டணத்தை செலுத்திய பின்னர் தரப்படும் சலானின் உங்களுக்கான பகுதியை பத்திரமாக வைத்திருக்கவும்.
விண்ணப்பிப்பது எப்படி
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரி இடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
முகவரி
Rayala Tower, 3rd Floor,
158 & Anna Salai,
Chennai - 600 002.
Tel No :044 667857233,66785730
முக்கிய தேதிகள்
கட்டணம் செலுத்த, விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.07.2011
இணையதள முகவரி : https://www.pnbindia.in/en/ui/Recruitment.aspx





