ஆண்டுக்கணக்காகியும் சீரமைக்காத ரோடு; தினம் அவதியில் மாணவர்கள்

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM
ADDED : ஜூன் 24, 2024 06:00 AM
சாணார்பட்டி:
சாணார்பட்டி அருகே பல ஆண்டுகளாக சேதமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்காததால் அதில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தினமும் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் இருந்து நத்தமாடிபட்டி வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது. இந்த சாலையை பண்ணைப்பட்டி, ராகலாபுரம், மஞ்சநாயக்கன்பட்டி, அதிகாரிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
கொசவபட்டி அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் இருந்து நத்தமாடிபட்டி வரை செல்ல அரசு, தனியார் போக்குவரத்து வசதியும் இல்லை.இதனால் இப்பகுதியில் படிக்கும் பல நுாறு மாணவர்கள் கால்நடையாகவும், சைக்கிள், டூவீலர் மூலமாக பள்ளி கல்லுாரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதி விவசாயிகள் கர்ப்பிணிகள், பொதுமக் களும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
சட்டைக்காரன்பட்டி பிரிவில் இருந்து கொழுஞ்சிபட்டி, பஞ்சம்பட்டி வரை செல்லும் சாலையும் சேதமடைந்த நிலையில் உள்ளது. பஞ்சம்பட்டி ஊராட்சியில் உள்ள இந்த இரண்டு சேதமான சாலைகளை புதுப்பித்து தர மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.
ஆண்டுக்கணக்கில் அவதி
ஏ.ஜி.டி.அந்தோணி, அ.தி.மு.க., மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர், கொசவபட்டி: கொழிஞ்சிப்பட்டி, நத்தம்மாடிப்பட்டி செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பல ஆண்டுகளாக மாணவர்கள், கர்ப்பிணிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நேரடியாக பார்வையிட்டு புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முதல் நத்தமாடிபட்டி வரை தார் சாலை அமைத்து தர வேண்டும்.இதேபோல் கொசவபட்டி அருகே சிறுமலை ஓடையில் ஆக்கிர மிப்புகள்,செடிகள் அதிகமாக ஆக்கிரமித்துள்ளன. அதை சுத்தம் செய்ய வேண்டும்.
தேவை தரமான தார் சாலை
ஜெ.ஆரோக்கிய மேரி , நாம் தமிழர் கட்சி,தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர், கொசவபட்டி:
நத்தம் பாடிபட்டி, பஞ்சம்பட்டி, புங்கம்பாடி போன்ற ஊர்களில் இருந்து விவசாயிகள் விளைவித்த காய் ,கறிகளை இந்த சாலை வழியாகத்தான் கொசவபட்டி சந்தை பகுதிக்கு கொண்டு வருகின்றனர்.
இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைவதோடு அவர்களும் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். தார் சாலையின் குறுக்கே தரை மட்டபாலம் ஒன்று உள்ளது .இதனை மேல்மட்ட பாலமாக மாற்றுவதோடு பள்ளி மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் தரமான தார் சாலையை அமைத்துத் தரவேண்டும்.
சாலை வசதி இல்லை
ஆரோக்கிய லாசர், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி, கொசவபட்டி:
கொசவபட்டி பகுதியில் உள்ள 5 பள்ளிகளை இணைக்கும் பிரதான சாலையாக உள்ள கொசவபட்டி நத்தமாடி பட்டி புனித அந்தோணி யார் மேல்நிலைப்பள்ளி உள்ள சாலை சேதம் குறித்து நாங்களும் பல முறை கிராமசபை கூட்டத்தில் மனுகொடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.
தினமும் இந்த ரோட்டின் வழியாக 300க்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள் .இதன் மூலம் இவர்கள் தினமும் பல் வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.