Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயற்கை நுண்ணறிவு மென்பொருள் முகவர்கள் மாநாடு

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் முகவர்கள் மாநாடு

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் முகவர்கள் மாநாடு


UPDATED : மார் 03, 2026 03:14 PM

ADDED : மார் 03, 2026 03:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2026 03:14 PM ADDED : மார் 03, 2026 03:17 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் செயற்கை நுண்ணறிவு, நுண்ணறிவு, மென்பொருள் முகவர்கள் மாநாடு நடந்தது.

மாநாட்டில், அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்று செயற்கை நுண்ணறிவு திறன்களின் பயன்கள், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டு வர அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் பயிற்சி திட்டங்களை எடுத்துரைத்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏ.ஐ., புதுமை படைப்பாளர்களின் மைய தலைவர் ரித்தீஷ் வெங்கட் ஜோஹி வரவேற்றார். துணைவேந்தர் மோகன் செயற்கை நுண்ணறிவு கல்வி மற்றும் தொழில் துறைகளில் ஏற்படுத்தும் தாக்கங்களை எடுத்துரைத்தார்.

ஜெயராம் இன்ஃபோடெக் நிறுவனர் ரங்கராஜன் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் நவீன தொழில் துறைகளில் உருவாகும் வாய்ப்புகள் குறித்தும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிபுணர் பார்கவி ஏ.ஐ., ஏஜெண்டுகளை உருவாக்குதல் குறித்து பேசினர். திட்ட மற்றும் மேம்பாட்டு இயக்குனர் செல்வராஜ் நன்றி கூறினார்.

தகவல் துறை நிபுணர்கள் நவீன குர்ரானி, கார்த்திக் ரெட்டி மல்லா, தீனா நாத், கணினித்துறை தலைவர் இளவரசன், தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் கீதா, கல்வி மற்றும் கற்றலில் புதுமைகள் இயக்குநர் விவேகானந்தன், பதிவாளர் (பொறுப்பு) சுந்தரமூர்த்தி, பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us