டென்சிங் நார்கே விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 09:25 AM

கோவை: இந்திய அரசின், டென்சிங் நார்கே விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக, கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அரசு சார்பில் நீர், நிலம், ஆகாயத்தில் மேற்கொள்ளப்படும் சாகச விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் 'டென்சிங் நார்கே' விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, 2023ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பம், https://awards.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.