பள்ளி கட்டடங்களில் விளம்பரங்களுக்கு தடை
பள்ளி கட்டடங்களில் விளம்பரங்களுக்கு தடை
பள்ளி கட்டடங்களில் விளம்பரங்களுக்கு தடை
UPDATED : ஜன 22, 2025 12:00 AM
ADDED : ஜன 22, 2025 10:44 AM
பெங்களூரு: பள்ளி வளாகம் மற்றும் கட்டடங்கள் மீது, வர்த்தக விளம்பர பலகைகள் பொருத்துவதற்கு, கல்வித்துறை தடை விதித்துள்ளது.
பெங்களூரு உட்பட, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பள்ளி வளாகங்கள், கட்டடங்களின் மீது விளம்பர பலகைகள் பொருத்தப்படுகின்றன. இவை மாணவர்களின் கவனத்தை திசை திருப்புகின்றன. இதைத் தீவிரமாக கருதிய கல்வித்துறை, பள்ளி வளாகங்கள் மற்றும் கட்டடங்கள் மீது, இவற்றை பொருத்தத் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை:
கல்வித்துறைக்கு சொந்தமான காலி இடங்கள், அரசு பள்ளி வளாகங்கள், கட்டடங்களின் மீது வர்த்தக விளம்பரங்கள் பொருத்துவது, துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுபோன்று விளம்பரங்கள் பொருத்துவது, அரசின் விதிகளுக்கு எதிரானது.
அரசின் எந்த பள்ளிகளின் வளாகங்கள், கட்டடங்களில் வர்த்தக விளம்பரங்கள் பொருத்த அனுமதி அளிக்கக் கூடாது. இது மாணவர்களின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அரசு உத்தரவை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.