யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி மீனவ சமுதாயத்தினருக்கு அழைப்பு

UPDATED : அக் 31, 2024 12:00 AM
ADDED : அக் 31, 2024 11:18 AM
ஈரோடு: மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப்பணிகளில் சேரும் போட்டி தேர்வில் சிறப்பிக்க, சென்னை அகில இந்திய குடிமை பணி பயிற்சி மையத்துடன், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து, 20 கடல் மற்றும் உள் நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்வு செய்து, ஆயத்த பயிற்சி அளிக்கிறது.
கடல் மற்றும் உள் நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள், பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சி பெற விரும்புவோர், www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழி-காட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரத்தை, ஈரோடு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், 7வது தளத்தில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.