Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்கும் விதிகளில் மாற்றம்

எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்கும் விதிகளில் மாற்றம்

எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்கும் விதிகளில் மாற்றம்


UPDATED : மே 01, 2026 11:00 AM

ADDED : மே 01, 2026 11:01 AM

Follow on Google

UPDATED : மே 01, 2026 11:00 AM ADDED : மே 01, 2026 11:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
புதிய மருத்துவ கல்லுாரிகளை தொடங்கவும், எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்கவும், தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி பெறுவது அவசியம். அதற்காக ஆண்டுதோறும் மருத்துவ கல்லுாரிகள் விண்ணப்பித்து, அங்கீகாரத்தை புதுப்பித்து வருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன், தேசிய மருத்துவ ஆணையம், எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், இனி மருத்துவ கல்லுாரிகளுக்கு, அதிகபட்சம் 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி வழங்கப்படும். 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் வீதம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய நடைமுறை 2025 - 26 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால், புதிய விதிகளை மறு ஆய்வுக்கு, மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. அதை தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையம், ஏற்கனவே கொண்டு வந்த இரண்டு விதிகளையும், ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதனால், மக்கள் தொகை அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல், மருத்துவ கல்லுாரிகளில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்ற விதியும் திரும்ப பெறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap