Dinamalar-Logo
Dinamalar Logo


கிளாட் 2025

கிளாட் 2025

கிளாட் 2025

UPDATED : ஜூலை 25, 2024 12:00 AMADDED : ஜூலை 25, 2024 07:59 PM


Google News
Latest Tamil News
இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் 'காமன் அட்மிஷன் டெஸ்ட்- கிளாட்' எனும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

குறிப்பாக, என்.எல்.எஸ்.ஐ.யு., என்.ஏ.எல்.எஸ்.ஏ.ஆர்., எ.எல்.ஐ.யு., போன்ற 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உட்பட ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், 'கிளாட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன் வழங்குகின்றன.

படிப்பு: எல்எல்.பி., - 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப்படிப்பு

தகுதி:
குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் / மே மாதத்தில் நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

படிப்பு:
எல்எல்.எம்., - ஓர் ஆண்டு முதுநிலை சட்டப்படிப்புகள்

தகுதி:
குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்.பி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் / மே மாதத்தில் நடைபெறும் தேர்வுகளுடன் எல்எல்.பி., படிப்பை நிறைவு செய்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://consortiumofnlus.ac.in/clat-2025/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு - ரூ. 4 ஆயிரம். எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி / வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பிரிவினருக்கு ரூ. 3 ஆயிரத்து 500.

தேர்வு முறை:
நேரடி எழுத்து தேர்வாக பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இத்தேர்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளி பிரிவினர் பிற்பகல் 2 மணி முதல் 4:40 மணி வரை தேர்வு எழுதலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15

தேர்வு நடைபெறும் நாள்:
டிசம்பர் 1

விபரங்களுக்கு:
https://consortiumofnlus.ac.in/






      Our Apps Available On




      Dinamalar

      Follow us