விதிமுறை மீறி சிண்டிகேட் பதவி பாரதியார் பல்கலையிடம் புகார்

UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM
ADDED : ஜூலை 24, 2024 09:47 AM

கோவை: பாரதியார் பல்கலையில், விதிமுறை மீறி சிண்டிகேட் பதவியில், தனியார் கல்லுாரி முதல்வர் ஒருவர் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, பாரதியார் பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், பதிவாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்கலை மானியக்குழு விதிமுறைகளின் படி, ஒரு கல்லுாரி முதல்வர், அப்பதவியில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் நீடிக்க இயலும். சம்பந்தப்பட்ட நபர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.
இவரது பதவிக்காலம், கடந்த, பிப்., மாதமே முடிந்த நிலையில், தற்போது வரை சிண்டிகேட் பதவியில் தொடர்வதும், சென்னையில் சமீபத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் பங்கேற்றதும் விதிமுறை மீறல்.
முதல்வர் பிரிவை அடிப்படையாக கொண்டே இவர், சிண்டிகேட் உறுப்பினர் பதவி வகிப்பதால், இவரை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும். புகாருக்கு உள்ளான நபர்கள், சிண்டிகேட் பதவி வகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வறு, புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.