Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ மகிழ்ச்சி

கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ மகிழ்ச்சி

கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ மகிழ்ச்சி


UPDATED : டிச 12, 2024 12:00 AM

ADDED : டிச 12, 2024 05:26 PM

Follow on Google

UPDATED : டிச 12, 2024 12:00 AM ADDED : டிச 12, 2024 05:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு:
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் சிஇ 20 இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது என இஸ்ரோ கூறியுள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை அமல்படுத்துவதில் இஸ்ரோ மும்முரமாக உள்ளது. இத்திட்டத்திற்கான கிரையோஜெனிக் சிஇ20 இன்ஜினை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த இன்ஜினை பலகட்டமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:


கடந்த 29 ம் தேதி கிரையோஜெனிக் சிஇ20 இன்ஜினின் கடல் மட்டத்திலான வெப்ப சோதனை வெற்றிகரமாக நடந்தது. அப்போது இன்ஜினை ரீஸ்டார்ட் செய்வதற்கு தேவையான சோதனையும் செய்யப்பட்டது. கடல் மட்டத்திலான இச்சோதனை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செய்யப்பட்டது.

கிரையோஜெனிக் இன்ஜினை ரீஸ்டார்ட் செய்வது ஒரு சிக்கலான செயல். இச்சோதனை வெற்றி பெற்றுள்ளது. அப்போது இன்ஜின் இயல்பானதாக இருந்தது. இன்ஜினின் செயல்பாடுகள் எதிர்பார்த்தபடி இருந்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap