Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

UPDATED : அக் 30, 2024 12:00 AMADDED : அக் 30, 2024 11:27 AM


Google News
வெண்ணந்துார்: நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், வெண்ணந்துார் வட்டார வளமையத்தில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் பயிற்சி பருவம்-2, நேற்று நடந்தது.

இதில், தொடக்க நிலை, 1 முதல், 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுந்தரராஜன் தொடங்கி வைத்து, எண்ணும் எழுத்தும் பயிற்சியின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.

இப்பயிற்சியில் செயல்பாட்டு வழியாக அனைத்து பாடங்களையும் எளிதாக கற்பிக்க பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், கற்றல், கற்பித்தல் திறன் சார்ந்த நுட்பங்கள், கற்றல் விளைவுகள் மற்றும் பாடவாரியாக கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளின் பயன்பாடு ஆகியவை விளக்கப்பட்டன.பயிற்சியில், தொடக்கநிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் உட்பட, 55 பேர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர். செல்வம் அவர்கள் பார்வையிட்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார். இப்பயிற்சியில் ஆசிரியர்கள் பிரவீனா, அபிநயா, சண்முகம், தமயந்தி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us