Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டேராடூன் ராணுவ கல்லுாரியில் 8ம் வகுப்பு சேர ஜூன் 1ல் தேர்வு

டேராடூன் ராணுவ கல்லுாரியில் 8ம் வகுப்பு சேர ஜூன் 1ல் தேர்வு

டேராடூன் ராணுவ கல்லுாரியில் 8ம் வகுப்பு சேர ஜூன் 1ல் தேர்வு

டேராடூன் ராணுவ கல்லுாரியில் 8ம் வகுப்பு சேர ஜூன் 1ல் தேர்வு

UPDATED : ஏப் 01, 2025 12:00 AMADDED : ஏப் 01, 2025 04:15 PM


Google News
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரியில், ஜனவரி, 2026ல் எட்டாம் வகுப்பில் சேர, ஜூன் 1ல் மாணவ - மாணவியருக்கு நுழைவு தேர்வு நடக்கிறது.

நுழைவு தேர்வு கேள்விகள், ஆங்கிலம், கணக்கு, பொது அறிவு போன்றவற்றில் இருந்து கேட்கப்படும். கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத்தாளுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் விடையளிக்க வேண்டும்.

நுழைவு தேர்வில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்வு வினாத்தாள் தொகுப்பை, கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரி, கர்ஹி கான்ட், டேராடூன் உத்தரகண்ட் - 248003 என்ற முகவரிக்கு வரைவோலை அனுப்பியோ அல்லது www.rimc.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ பெறலாம்.

விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 2013 ஜனவரி 2க்கு முன்னும், 2014 ஜூலை 1க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us