Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கே.பி.எஸ்., மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி

கே.பி.எஸ்., மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி

கே.பி.எஸ்., மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி


UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM

ADDED : ஜூலை 09, 2025 01:40 PM

Follow on Google

UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM ADDED : ஜூலை 09, 2025 01:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடக பப்ளிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் வசதி செய்ய கல்வித்துறை திட்டம் வகுத்துள்ளது, என தொடக்க கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:


அரசு பள்ளிகள், கே.பி.எஸ்., எனும் கர்நாடக பப்ளிக் பள்ளிகளை மேம்படுத்த மாநில அரசு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சரியான கட்டடம், அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் பிரச்னைகள் தீர்க்கப்படும்.

கே.பி.எஸ்.,களில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் வசதி செய்யப்படும்.

இப்பள்ளிகளில் ஏழை மாணவர்களே, அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இங்கு எல்.கே.ஜி., முதல் பி.யு.சி., வரை கல்வி கிடைக்கிறது. இவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கிறது. ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாமல், 20,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இலவச பள்ளி பஸ் திட்டமும் விரைவில் துவக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap