UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 03:35 PM

கல்லூரிகள் திறன் மிக்க பட்டதாரிகளை உருவாக்கினால் மட்டுமே தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும். ஆகவே, கல்லூரிகளே தொழில் நிறுவனங்களுக்கான விதை. ஆனால், தொழில் நிறுவனங்களில் தேவைப்படும் திறன்களுக்கும், கல்லூரிகளில் மாணவர்கள் பெறும் கல்விக்கும் நீண்ட இடைவெளி உள்ளது.
தொழில் நிறுவனங்களில் நடைபெறும் தொடர் மாற்றங்கள் குறித்து கல்லூரி பேராசியர்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், அத்தகைய திறன்களை மாணவர்களுக்கு அவர்களால் வழங்க முடியும்..
ஆகையால், தொழில் நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கவும், துறை சார்ந்து தொழில் நிறுவனங்களில் நிகழும் நவீன மற்றும் சமீப மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்ளவும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல் பேராசிரியர்களுக்கு பிரத்யேக 'இன்டர்ஷிப்' பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் சென்னையில் நடந்த சி.ஐ.ஐ.,யின் தமிழ்நாடு திறன் மாநாட்டில் தொழில்துறை வல்லுநர்கள் வலியுறுத்தினர்.