தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.ஐ.ஐ.டி.யின் ஒன் வோர்ல்ட் மையம் கோவையில்

என்.ஐ.ஐ.டி.யின் ஒன் வோர்ல்ட் மையம் கோவையில்

என்.ஐ.ஐ.டி.யின் ஒன் வோர்ல்ட் மையம் கோவையில்


UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM

ADDED : ஜூன் 22, 2011 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM ADDED : ஜூன் 22, 2011 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் முதன்மையான கணினி மையமான என்.ஐ.ஐ.டி., புதிதாக 100 மையங்களை அடுத்த ஆண்டிற்குள் உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் மையத்தை கோவையில் துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


என்.ஐ.ஐ.டி. ஒன் வோர்ல்ட் சென்டர் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி உருவாக்கப்படும் கணினி மையங்கள், மாணவர்களுக்கு பன்முக திறமைகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்படும் என்று என்.ஐ.ஐ.டி.யின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.


என்.ஐ.ஐ.டி. ஒன் வோர்ல்ட் சென்டர்களை உருவாக்க வரும் 12-15 மாதங்களில் 16 கோடி ரூபாய் வரை செலவிடப்பட உள்ளது. அதேப்போல அடுத்த 2 ஆண்டிற்குள் 250-300 மையங்களை துவக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய தொழில்நுட்பத் தேவைக்கு ஏற்ப, வங்கி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ. உள்ளிட்ட பல்வேறு வகையான நிறுவனங்களில் பணியாற்றும் வகையில் இந்த மையங்களில் இருந்து வெளிவரும் மாணவர்கள் அதீத திறமை பெற்றிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us