தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலை. கவுன்சலிங்: 544 மாணவர்கள் சேர்ந்தனர்

வேளாண் பல்கலை. கவுன்சலிங்: 544 மாணவர்கள் சேர்ந்தனர்

வேளாண் பல்கலை. கவுன்சலிங்: 544 மாணவர்கள் சேர்ந்தனர்


UPDATED : ஜூன் 23, 2011 12:00 AM

ADDED : ஜூன் 23, 2011 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2011 12:00 AM ADDED : ஜூன் 23, 2011 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மூன்றாவது நாள் கவுன்சலிங்கில் 176 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதுவரை 544 மாணவர்கள் பல்வேறு படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, பி.டெக். படிப்புகளுக்கான முதல் கட்ட கவுன்சலிங் திங்கள்கிழமை துவங்கியது.  புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது நாள் கவுன்சலிங்கில் 176 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த மூன்று நாள்களில் அதிகபட்சமாக பி.எஸ்சி. (வேளாண்மை) படிப்பை 256 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.


அதற்கடுத்ததாக, பி.டெக். (பயோடெக்) படிப்பை 48 பேரும், பி.டெக். (உணவு பதனிடுதல்) படிப்பை 39 பேரும், பி.டெக். (வேளாண் பொறியியல்) படிப்பை 35 பேரும், பி.டெக். (எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்) படிப்பை 29 பேரும், பி.எஸ்சி. தோட்டக்கலை (திருச்சி) படிப்பை 24 பேரும், பி.எஸ்சி. தோட்டக்கலை (பெரியகுளம்) படிப்பை 21 பேரும், பி.எஸ்சி. வனவியல் படிப்பை 25 பேரும் தேர்வு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us