UPDATED : ஜூன் 24, 2011 12:00 AM
ADDED : ஜூன் 28, 2011 11:08 AM
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் http://www.annauniv.edu/tnea2011/ ரேங்குகளை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கு 1,25,000 இடங்கள் உள்ளன.
இவற்றை அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மூலம் நிரப்புகிறது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு கடந்த 20ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேங்க் பட்டியல் அடிப்படையில்தான் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பார்கள்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. உடனடியாக மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தங்களது ரேங்குகளை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
