UPDATED : ஜூன் 24, 2011 12:00 AM
ADDED : ஜூன் 24, 2011 12:41 PM
கல்வித் தகுதி : கால்நடை உற்பத்தி பொருட்களின் தொழில்நுட்பம், தீவன ஆலை மேலாண்மை பயிற்சியில் சேர 12ம் வகுப்பும், கால்நடை மற்றும் கோழிப்பண்ணை மேலாளர் பயிற்சியில் சேர 10ம் வகுப்பும், பசுந்தீவன உற்பத்தி, ஜப்பானிய காடை, வான்கோழி, கறவைமாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சிகளுக்கு 8ம் வகுப்பும் முடித்திருக்க வேண்டும்.
பயிற்சிக் காலம் : வெள்ளாடு பயிற்சிக்கான காலம் 3 மாதங்கள். மற்ற அனைத்து பயிற்சிகளுக்கும் காலம் 6 மாதங்கள் ஆகும். அனைத்து பாடங்களும் தமிழில் நடத்தப்படும்.
கடைசி தேதி : பயிற்சியில் சேர ஜுலை 29ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய 044-255554375, 25554555 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் டி. கதிரேசன் தெரிவித்துள்ளார்.
