தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லூரியில் முக்கிய பாடப்பிரிவுகள் இல்லை

அரசு கல்லூரியில் முக்கிய பாடப்பிரிவுகள் இல்லை

அரசு கல்லூரியில் முக்கிய பாடப்பிரிவுகள் இல்லை


UPDATED : ஜூன் 25, 2011 12:00 AM

ADDED : ஜூன் 25, 2011 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2011 12:00 AM ADDED : ஜூன் 25, 2011 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் சேர ராமநாதபுரம் மட்டுமின்றி ராமேஸ்வரம், பரமக்குடியில் உள்ளவர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மாணவிகள் அதிகம் விரும்பும் பி.எஸ்.சி., வேதியியல், இயற்பியல், விலங்கியியல், பி.ஏ., ஆங்கிலம், தமிழ், பொருளாதாரம், அரசியல் போன்ற கோர்ஸ்கள் இல்லாததால் மாணவிகள் ஏமாற்றமடைகின்றனர்.



தனியார் கல்லூரிகளை விட சிறந்த பரிசோதனை கூடம் வசதி இருந்தும், பி.எஸ்.சி., கோர்ஸ்களின் முக்கிய பிரிவுகள் இல்லாமல் கணிதம், கம்ப்யூட்டர் பிரிவுகள் மட்டுமே வைத்துள்ளனர். மேலும் தமிழ், ஆங்கிலம் போன்ற பாடப்பிரிவுகள் எடுத்து ஆசிரியராக வேண்டும் என்ற கனவில் உள்ள மாணவிகளும், இப்பிரிவுகள் இல்லாததால் படிப்பை தொடரமுடியாமல் பிளஸ் 2 உடன் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.



காரைக்குடி அழகப்பா பல்கலைக்கு ஆண்டுதோறும் இக்கல்லூரிக்கு தேவையான முக்கிய கோர்ஸ்களின் தேவை குறித்து கடிதம் அனுப்பியும் பலனில்லை. அழகப்பா பல்கலை அதிகாரிகள் ஆய்வு செய்து ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரிக்கு தேவையான கோர்ஸ்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us