UPDATED : ஜூன் 25, 2011 12:00 AM
ADDED : ஜூன் 25, 2011 01:06 PM
அ நிறம் | அளவு
சென்னை அண்ணா பல்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனியப்பன், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பொறியியல் படிப்புகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டி ஆலோசனை நடத்தி வருகிறது.
விரைவில் இந்தக் கமிட்டியின் முடிவு வெளியிடப்படும். இதுபோல், கல்லூரிகள் நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனவா என்பதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டண ஒழுங்குக் கமிட்டி தொடர்ந்து செயல்படும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
