கால்நடை மருத்துவப் படிப்பு: ரேங்க் பட்டியல் வெளியீடு
கால்நடை மருத்துவப் படிப்பு: ரேங்க் பட்டியல் வெளியீடு
UPDATED : ஜூன் 25, 2011 12:00 AM
ADDED : ஜூன் 25, 2011 02:32 PM
ரேங்க் பட்டியலைக் காண இந்த http://www.tanuvas.tn.nic.in/ugrank2011/COUNSELLING%20NOTIFICATION%202011_TAMIL.pdf இணைய தளத்தைப் பார்க்கவும். ஜூலை 13, 14 தேதிகளில் கவுன்சலிங் நடைபெற உள்ளது.
இளநிலை கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச்.), இளநிலை மீன்வள பட்டப்படிப்பு (பி.எஃப்.எஸ்.சி), பி.டெக் உணவு பதனிடும் தொழில்நுட்பம் (பி.டெக். புஃட் பிராஸஸிங் டெக்னாலஜி), பி.டெக். கோழியின உற்பத்தித்திட்டம் (பி.டெக்.பெளல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
மொத்தம் 6,722 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு 5,864 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து திரும்பப் பெறப்பட்டன. அவற்றில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கென பெறப்பட்டன.
விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நிறைவடைந்த நிலையில், சனிக்கிழமை ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. ஜூலை 13-ம் தேதி கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு படிப்புக்கான கவுன்சலிங் நடைபெறும். மீதம் உள்ள மூன்று படிப்புகளுக்கான கவுன்சலிங் ஜூலை 14-ம் தேதி நடைபெறும்.
