UPDATED : ஜூன் 26, 2011 12:00 AM
ADDED : ஜூன் 26, 2011 05:03 PM
அ நிறம் | அளவு
இதனால் ஒருவித பயம், இறுக்கம் மனதில் ஏற்படும். ஆசிரியர்களுக்கோ பெற்றோர், மாணவரிடம் நல்ல ஆசிரியர் என பெயர் வாங்க வேண்டும், கற்பித்தல், தேர்வு, திருத்தம் என இயந்திரமாக செயல்பட்டு நூறு மதிப்பெண் பெறச் செய்ய வேண்டும். இன்றைய நிலையில் பெற்றோர் குழந்தைகளின் கல்விக்குச் செலவிடுவது, ஒரு &'முதலீடு&' என்ற கருத்து உள்ளது. இதைத் தாண்டி, மாணவர்களுக்கு அடிப்படையாக பல பிரச்னைகள் உள்ளன என்பதை யாரும் எண்ணுவதில்லை.
பாதிக்கும்
மாணவர்கள்: ஆயிரம் தடவை சொன்னாலும் மரமண்டையில் ஏறுவதில்லை என வீசும் சொல்லம்பு சிறியதுதான். ஆனால் எதிர்மறை விளைவாக, மாணவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்து, எதிர்காலத்தை இருளச் செய்துவிடும். பெற்றோர் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளிடம் செலவிடும் நேரம் குறைவு. கூட்டுக் குடும்பங்களும் மறைந்துவிட்டதால், வழிநடத்த பெரியவர்கள் இல்லை. நாம் இருவர், நமக்கு ஒருவர் என்பதால், குழந்தைகளின் உணர்வை பரிமாற வடிகால் இல்லை. எனவே வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், இன்டர்நெட் என வளர்ந்து, முகம் தெரியாத நட்பாக மாறி, எங்கோ சென்று முடிகிறது.மனநல
மேம்பாடு: கவனச் சிதறல், எதிர்மறை சிந்தனை, எரிச்சல் என மாணவர்கள் செயல்படுகின்றனர். இதனால்தான் மேல்நாடுகளில் ஒவ்வொரு பள்ளியிலும், கவுன்சிலர்கள் என்ற மனநல மேம்பாட்டாளர் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் இங்கு, மனநலம் என்றாலே தாழ்வாக நினைக்கின்றனர். மனிதர்கள் கோபம், பொறாமை, எரிச்சல் என எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, இயல்பாக, நேர்மறை எண்ணத்துடன் செயல்பட, உடற்பயிற்சி போல, மனநல பயிற்சி செய்வது அவசியம். சிறுவயது, டீன் ஏஜ் பிரிவினருக்கு இத்தகைய பயிற்சிகள் அதிகம் தேவை.மென்திறன்
வளர்த்தல்: கவுன்சிலிங் என்பதை புத்திமதி கூறுவதாக பலர் தவறாக கருதுகின்றனர். அட்வைஸ் வேறு, கவுன்சிலிங் வேறு. பிரச்னைகளில் இருந்து தம்மை எவ்வாறு பாதுகாப்பது, அதற்கான அடிப்படை உத்திகளை, விளையாட்டு, கலந்துரையாடல் மூலம் புரிந்து செயல்பட வைப்பதே கவுன்சிலிங். பெற்றோர், மாணவரிடையே புரிந்துணர்வு, நேர மேலாண்மை, திட்டமிடல், முடிவெடுக்கும் குழப்பத்தில் இருந்து தீர்வு காணுதல், மேற்படிப்பு ஆலோசனை, தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணத்தை வலுப்படுத்துதல், ஆளுமை மேம்பாடு போன்ற மென்திறன் பயிற்சிகளை கவுன்சிலிங் மூலம் பெறலாம்.மேலும்
பாலியல் கல்வி, போதை பொருளில் இருந்து பாதுகாப்பது, ரத்ததானம், விபத்து, இக்கட்டான சூழலில் எப்படி விடுவிப்பது, மனதை ஒருமுகப்படுத்த கவுன்சிலிங் பயிற்சியை செயல்படுத்தலாம். இதன்மூலம் மாணவர் திறன் மேம்பட வழி கிடைக்கும். எனவே கவுன்சிலிங் வசதி பள்ளிகளில் அவசியம் இடம்பெறுதல் வேண்டும்.மதுரை
முதன்மை கல்வி அலுவலர் கு.ரஜனிரத்னமாலா கூறுகையில், &'கவுன்சிலிங் வசதி மாணவர்களுக்கு அவசியம் தேவை. இதனால் மனஉறுதி, தன்னம்பிக்கை, வழிகாட்டுதல் கிடைக்கிறது. தேர்வில் தோல்வியை பொருட்படுத்த வேண்டியதே இல்லை. அதுவே வெற்றிக்கு வழி என்பதை புரிந்து கொள்ளச் செய்யலாம். வாழ்க்கையோடு இணைந்த கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்&' என்றார்.