தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் அறிவிப்பு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் அறிவிப்பு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் அறிவிப்பு


UPDATED : ஜூன் 27, 2011 12:00 AM

ADDED : ஜூன் 27, 2011 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2011 12:00 AM ADDED : ஜூன் 27, 2011 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்சி., அண்டு ஏ.எச்., ), இளநிலை மீன்வளம் (பி.எப்.எஸ்சி.,), பி.டெக்., (உணவு பதனிடல் தொழில்நுட்பம்- பி.டெக்., -எப்.பி.டி.,) மற்றும் பி.டெக்., (கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம்- பி.டெக்., - பி.பி.டி.,) ஆகிய பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது.


பி.வி.எஸ்.சி., மற்றும் எ.எச்.,(கலையியல் பிரிவு மற்றும் தொழில் பிரிவு) பிரிவு கவுன்சிலிங், ஜூலை 13 காலை 9 மணியில் இருந்தும், மற்ற படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஜூலை 14 காலை 9 மணிக்கும் நடைபெறுகிறது.


கட் ஆப் மதிப்பெண்கள் வரையறைக்குள் இடம்பெற்றுள்ள மாணவர்கள், குறிப்பிட்ட நாளில், உரிய நேரத்தில் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும். கவுன்சிலிங் விவர பட்டியல், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.


தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும், குறிப்பிட்ட, கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள், தகுந்த சான்றிதழ்களுடன் நேரடியாக கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம் என, கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


ரேங்க் பட்டியல், கால்நடை பல்கலை இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. முகவரி: www.tanuvas.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us