UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM
ADDED : ஜூன் 28, 2011 05:25 PM
மெக்கட்ரானிக்ஸ் என்பது பொதுவாக மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 2 துறைகள் இணைந்த ஒன்று என்றாலும், இதில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சாப்ட்வேர் இன்ஜினியரிங், கன்ட்ரோல் இன்ஜினியரிங் மற்றும் சிஸ்டம் டிசைன் இன்ஜினியரிங் போன்ற இதர பிரிவுகளும் உள்ளடங்கியுள்ளன. மொத்தத்தில் பொறியியலை பல பிரிவுகளாக பிரிப்பது தவிர்க்கப்பட்டு, ஒரே துறையாக இயங்குவது அதன் நோக்கமாகும். தொழில்நுட்ப அமைப்பானது
மெக்கட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக
"தொழிற்சாலை ரோபோ" -ஐ கூறலாம். ஏனெனில் இதில் மெக்கானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளன. இந்தப் படிப்பை, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவியா, ஈரான், அயர்லாந்து, இத்தாலி, ஐஸ்லாந்து, ஜப்பான், ஜோர்டான், மலேஷியா, மெக்சிகோ, நார்வே, பாகிஸ்தான், போலந்து, சிங்கப்பூர், ஸ்லோவேனியா மற்றும் ஸ்வீடன் போன்ற பல நாடுகள் இன்றைய நிலையில் வழங்குகின்றன.