தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருத்தப்பட்ட மருத்துவ ரேங்க பட்டியல் இன்று வெளியீடு

திருத்தப்பட்ட மருத்துவ ரேங்க பட்டியல் இன்று வெளியீடு

திருத்தப்பட்ட மருத்துவ ரேங்க பட்டியல் இன்று வெளியீடு


UPDATED : ஜூன் 29, 2011 12:00 AM

ADDED : ஜூன் 29, 2011 11:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2011 12:00 AM ADDED : ஜூன் 29, 2011 11:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு


ஜுன் 30ம் தேதி மருத்துவ படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வு துவங்க உள்ளநிலையில், இன்று மாலை புதிய ரேங்க் பட்டியல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில், குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்காக விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். இதில் நகல் பெற்ற 4 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தனர்.


பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்குவதற்குள், இந்தப் பணிகளை முடிக்க தேர்வுத் துறை தீவிரமாக பணியாற்றியது. திருத்தப்பட்ட புதிய மதிப்பெண்கள் சி.டி.க்களாக எடுத்து, அதனை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு புதன்கிழமை வழங்கப்பட உள்ளன.


இந்த சி.டி.க்கள் கிடைக்கப் பெற்றதும், புதிய மதிப்பெண் விவரங்களைக் கொண்டு திருத்தி அமைத்த புதிய மருத்துவ ரேங்க் பட்டியலை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இன்று மாலை வெளியிடும்.


அதேப்போல, மாணவர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் சிறப்பு மையங்கள் மூலூம் வியாழக்கிழமையில் கையில் கிடைத்துவிடுமாறு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us