UPDATED : ஜூலை 01, 2011 12:00 AM
ADDED : ஜூலை 01, 2011 10:04 AM
அ நிறம் | அளவு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, சிறப்பு பிரிவினர் கவுன்சிலிங் சென்னை, கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்வி இயக்குனரக வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழகத்தில் உள்ள, 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம், 1,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், சிறப்பு பிரிவினரான, விளையாட்டு வீரர்களுக்கு மூன்று இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 51 இடங்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதுகுறித்து
, கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குனர் ஷீலா, நிருபர்களிடம் கூறியதாவது: விளையாட்டு வீரர்கள் பிரிவில், தகுதியின் அடிப்படையில், 12 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலையின் விளையாட்டுக் குழுவின் பரிந்துரைப்படி, இவர்களில் மூன்று பேர், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்க்கப்படுவர்.கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள
, 66 மாற்றுத் திறனாளிகளில், 51 பேருக்கும், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், 15 பேரில், இரண்டு பேருக்கும் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைக்கும். பி.டி.எஸ்., படிப்பில், இவர்களுக்கு முறையே 3, 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது
. நாளை முதல், 6ம் தேதி வரை, பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், இன்று காலை 8.30 மணிக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் துவக்கி வைக்கிறார். சிறப்பு பிரிவினரை சேர்த்து, முதல்கட்ட கவுன்சிலிங்கிற்கு, 1,803 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.முதல்கட்ட கவுன்சிலிங் மற்றும் அகில இந்திய இட ஒதுக்கீடு ஆகியவற்றில் நிரப்பப்படாத எம்
.பி.பி.எஸ்., இடங்கள் இறுதி செய்யப்பட்டு, வரும் செப்டம்பர் இறுதி வாரத்தில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெறும். இந்த ஆண்டு, புதிதாக இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீடாக, 150 இடங்கள் கிடைக்கும். இவ்வாறு ஷீலா கூறினார்.முதல் மாணவியாக சேர்க்கை பெற்ற ஆஷிகா சரஸ்வதி கூறும்போது
, "என், கட்-ஆப் மதிப்பெண், 197.75. தரவரிசைப் பட்டியலில், பி.சி., பிரிவில், 862வது இடமும், சிறப்பு பிரிவில், 11வது இடமும் கிடைத்தது. சிறப்பு பிரிவில் இரண்டாம் இடம்பிடித்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளேன். எம்.பி.பி.எஸ்., படிப்பில், ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா ஒரு இடமாவது ஒதுக்கப்பட வேண்டும்" என்றார்.