விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : ஜூலை 11, 2011 12:00 AM
ADDED : ஜூலை 11, 2011 05:09 PM
டான் பாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் ஆர்ட்ஸ் கல்வி நிறுவனத்தில் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் டிசைன் படிப்புகளில் அறிமுகமாகியுள்ள 7 படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விஷுவல் கம்யூனிகேஷன் தொடர்பான 7 புதிய படிப்புகள் அறிமுகமாகின்றன. அதில் இளநிலை, முதுகலை, டிப்ளமோ படிப்புகளும் அடங்கும். ஆர்ட், டிசைன், மீடியா துறைகளில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இப்படிப்புகள் அமைந்துள்ளன.
ஆர்ட் அன்ட் டிசைன் (ஹானர்ஸ்), டிப்ளமோ இன் வீடியோகிராபி அன்ட் டெலிவிஷன் புரொடக்ஷன், டிப்ளமோ இன் கம்யூனிகேஷன் டிசைன், டிப்ளமோ இன் அனிமேஷன் அன்ட் விஷுவல் எபெக்ட்ஸ், டிப்ளமோ இன் அட்வெர்டைசிங், டிப்ளமோ இன் போட்டோகிராபி, டிப்ளமோ இன் நியூ மீடியா டெக்னாலஜிஸ் ஆகிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
விண்ணப்பங்களை www.dbica.org இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கல்வி நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூலை 115ம் தேதியாகும். விண்ணப்பத்துடன் ரூ.200க்கான டி.டி. எடுத்து இணைத்து அனுப்ப வேண்டும்
