ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜி.யை ஒதுக்கும் மாணவிகள்
ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜி.யை ஒதுக்கும் மாணவிகள்
UPDATED : ஜூலை 13, 2011 12:00 AM
ADDED : ஜூலை 13, 2011 05:33 PM
அ நிறம் | அளவு
பொறியியல் பாடப்பிரிவுகளில் ஆட்டோமொபைல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மாணவிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதுவரை ஆட்டோமொபைல் பிரிவை ஒரு மாணவியர் கூட தேர்வு செய்யவில்லை
. அதேப்போல, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை வெறும் 20 மாணவிகள் மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர்.பொறியியல் பாடப்பிரிவில்
, இதுவரை 11,010 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 5844 பேர் மாணவர்கள், 5166 பேர் மாணவிகளாவர்.பொதுவாக எல்லாப் பிரிவுகளிலுமே மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர்
. சில பாடப்பிரிவுகளை மாணவிகளே அதிகமாக எண்ணிக்கையில் தேர்வு செய்துள்ளனர்.ஆனால்
, தொழிற்கூட அமைப்பில் இருக்கும் படிப்புகளான ஆட்டோமொபைல் படிப்பினை மாணவிகள் தேர்வு செய்யவே இல்லை. அதேப்போலத்தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கையும் மாணவிகள் விரும்பவில்லை.எல்லாவற்றையும் விட
, எலக்ட்ரானிக்ஸ் ஆன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பினை 1,707 மாணவிகள் தேர்வு செய்துள்ளனர். இந்த படிப்பை வெறும் 995 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர்.அடுத்தபடியாக
, கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் பிரிவை 1140 மாணவியர் தேர்வு செய்துள்ளனர்.