UPDATED : ஜூலை 17, 2011 12:00 AM
ADDED : ஜூலை 17, 2011 02:59 PM
சென்னை: பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கி, ஜுலை 16ம் தேதி வரையிலான 9 நாட்கள் முடிவில் மொத்தம் 21,488 பேர் பொறியியல் சேர்க்கைப் பெற்றுள்ளனர். இதில், ஆரம்பத்திலிருந்தே ஒதுக்கப்பட்டு வந்த துறையான பயோ-டெக்னாலஜி துறையானது, தற்போது மாணவிகளின் ஆதிக்கம் நிறைந்ததாக மாறியுள்ளது. இத்துறையை இதுவரை தேர்வுசெய்த 296 பேரில், 231 பேர் மாணவிகள். வெறும் 65 பேர்தான் மாணவர்கள்.
கடந்த 9 நாட்களாக எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் துறைதான் மாணவர்களின் பேரபிமானத்தைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துறையையும் அதிகளவில் மாணவிகளே தேர்ந்தெடுத்துள்ளனர். இதுவரை பொறியியல் சேர்க்கைப் பெற்றுள்ள மொத்த நபர்களில், 11167 பேர் மாணவர்கள் மற்றும் 10321 பேர் மாணவிகள். மெக்கானிக்கல் பாடத்தைப் பொறுத்தளவில், அதை 3553 மாணவர்கள் தேர்வு செய்திருக்க, வெறும் 26 மாணவிகளே அப்பாடத்தை தேந்தெடுத்துள்ளார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தை 3502 மாணாக்கர்களும், அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளை 4045 மாணாக்கர்களும், சுயநிதிக் கல்லூரிகளை 13941 மாணாக்கர்களும் தேர்வு செய்துள்ளனர்.
