UPDATED : ஜூலை 18, 2011 12:00 AM
ADDED : ஜூலை 18, 2011 10:51 AM
இன்று காலை 9 மணிக்கு எம்.பி.ஏ. (ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட்) பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்தது. சேர்க்கை பெற்ற மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் மொத்தமாக 52,070 ரூபாயாகும். 10 மணிக்கு எம்.பி.ஏ. (ரெகுலர்) சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கல்விக் கட்டணம் மொத்தமாக 33,520 ரூபாயாகும். 3 மணிக்கு எம்.பி.ஏ. (பகுதி நேரம்) சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் 29,470 ரூபாயாகும். கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிய மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் தங்களுக்கான நேரத்திற்கு 2 மணி நேரம் முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும். கலந்தாய்விலேயே சான்றிதழ் சரிபார்ப்பு, உடற் தகுதி பரிசோதனை, கல்விக் கட்டணம் செலுத்துதல் ஆகியவை முடிந்து மாணவர்கள் சேர்க்கை ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம்.
