UPDATED : ஜூலை 19, 2011 12:00 AM
ADDED : ஜூலை 19, 2011 12:16 PM
சிஎஸ்இயின் க்ரீன் பள்ளி விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகள் பட்டியலில் சென்னையில் உள்ள சேத் பி.டி. ஹிந்துஜா சிந்தி மாடல் சீனியர் செகண்டரி பள்ளியும் இடம்பிடித்துள்ளது.
இந்தியாவில் உள்ள 15,000 பள்ளிகள் கலந்து கொண்ட இந்த விருதுக்கான போட்டியில் 144 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதிப் பட்டியலில் ஊரக, புறநகர்ப் பகுதி மற்றும் அரசு பள்ளிகளே அதிக இடம் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மழை நீர் சேகரிப்பு திட்டம், பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவது, சிறந்த மேலாண்மை, நீண்ட கால செயல்திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு இப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
தேசிய அளவிலான 10 பள்ளிகள் மற்றும் புதிய 10 பள்ளிகள் என்ற பிரிவின் கீழ் மொத்தம் 20 பள்ளிகள் இந்த விருதிற்கு தேர்வாகியுள்ளன. இதில் புதிய பத்து பள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் சென்னையில் உள்ள சேத் பி.டி. ஹிந்துஜா சிந்தி மாடல் சீனியர் செகண்டரி பள்ளி இடம்பிடித்துள்ளது.
