UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM
ADDED : ஜூலை 20, 2011 12:36 PM
அ நிறம் | அளவு
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 23 கல்லூரிகளையும் சேர்த்து தமிகததில் உள்ள பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில்
484 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் இருந்தன. இந்த நிலையில் 2011-12ம் கல்வியாண்டில், 100க்கும் மேற்பட்ட அமைப்புகளும், கல்லூரிகளும் புதிய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) விண்ணப்பித்திருந்தன.இந்த விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட ஏஐசிடிஇ
, ஒவ்வொரு கல்லூரியாக அனுமதி அளித்து வருகிறது. அதன்படி இந்த கல்வியாண்டில் இதுவரை 23 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசீலித்து புதிய கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் பணி நடைபெற்று வருவதால்
, தமிழகததில் மேலும் புதிய பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.