தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் சேர்க்கையில் முன்னிலை வகிக்கும் மாணவிகள்

பொறியியல் சேர்க்கையில் முன்னிலை வகிக்கும் மாணவிகள்

பொறியியல் சேர்க்கையில் முன்னிலை வகிக்கும் மாணவிகள்


UPDATED : ஜூலை 22, 2011 12:00 AM

ADDED : ஜூலை 22, 2011 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2011 12:00 AM ADDED : ஜூலை 22, 2011 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொறியியல் சேர்க்கையில் இதுவரை 33,900 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 16,327 பேர் மாணவிகளாவர். மாணவர்கள் 17,573 பேர்.

பொதுவாக எண்ணிக்கைப்படி பார்த்தால், மாணவர்கள் அதிகமாக சேர்க்கை பெற்றுள்ளனர். ஆனால், முக்கியப் பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ள மாணவிகளின் விகிதாச்சாரத்தைப் பார்த்தால், பொதுவாக பலப் பிரிவுகளிலும் மாணவிகளே அதிகளவில் சேர்ந்துள்ளனர்.

குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் மாணவர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதுபோன்ற முக்கியப் பாடப்பிரிவுகளில் மாணவிகள் 65 விழுக்காடு அளவிற்கு சேர்க்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் எடுத்துப் படிக்கும் பாடப்பிரிவுகள் என்று குறிப்பிடும் சில பாடப்பிரிவுகளில் மட்டுமே மாணவிகளை விட மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். உதாரணத்திற்கு, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளாகும். இவற்றில் மாணவிகள் குறைந்த அளவில் சேர்ந்துள்ளது, படிப்பின் தன்மையைப் பொறுத்ததாகும்.

பலப் பாடப்பிரிவுகளிலும், மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் சேர்க்கை பெற்றுள்ளனர்.

இந்த கல்வியாண்டில் பொறியியல் சேர்க்கையில் குறிப்பிடத்தக்க அளவில் மாணவிகள் பங்கேற்று, பொறியியல் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us