தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராகிங்கை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை

ராகிங்கை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை

ராகிங்கை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை


UPDATED : ஜூலை 23, 2011 12:00 AM

ADDED : ஜூலை 23, 2011 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2011 12:00 AM ADDED : ஜூலை 23, 2011 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதன்படி, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளும் ஆகஸ்டு 1-ந் தேதி திறக்கப்படவேண்டும். அன்று மாணவ-மாணவிகளையும், அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து கூட்டம் நடத்த வேண்டும்.

ராக்கிங்கில் ஈடுபடக்கூடாது என்றும் அதனால் வரும் தண்டனைகளையும் விவரமாக அச்சடிக்கப்பட்ட படிவத்தில் பெற்றோரும், மாணவர்களும் கையெழுத்திடவேண்டும்.

அதுமட்டுமல்ல அந்த படிவம் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்க வேண்டும்.

அனைத்து ஜுனியர் மற்றும் சீனியர் மாணவர்களிடமும், விடுதியில் சேரும் மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் இந்த கையெழுத்தை பெறவேண்டும்.

ராக்கிக்கை தடுக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உதவிபேராசிரியர்கள் ஆகியோரை கொண்ட படை அமைக்கப்பட வேண்டும். அந்த படை தினமும் மாணவ-மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் விடுதிக்கும், மாணவிகளின் விடுதிக்கும் சென்று முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளின் குறைகளை கேட்டறிய வேண்டும். குறிப்பாக ராக்கிங்க் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை இந்த கண்காணிப்பு இருக்க வேண்டும்.

கல்லூரியில் பகல்நேரத்தில் ராக்கிங்கை தடுக்கவும் கண்காணிக்கவும் சீனியர் ஆசிரியர் ஒருவரை நியமிக்கவேண்டும்.

விடுதியில் உள்ள புதிய மாணவர்களையும், புதிய மாணவிகளையும் தனியாக வைக்கப்படவேண்டும். அதாவது சீனியர் மாணவர்களிடம் இருந்து பிரிக்கவேண்டும்.

ராக்கிங்கை தடுக்க ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமித்து தினமும் விடுதிகளில் திடீர் ஆய்வு செய்ய வைக்கவேண்டும்.

விடுதி வார்டன் தினமும் விடுதிகளில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும்.

கல்லூரியிலும் விடுதியிலும்,கேண்டீனிலும் ராக்கிங்கை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பற்றியும் ராக்கிங்கில் ஈடுபட்டால் என்ன தண்டனை என்பது பற்றியும் டிஸ்பிளே போர்டில் போடவேண்டும்.

தமிழ்நாடு கொண்டு வந்த ராக்கிங் அவரச சட்டம் 96 மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வழிகாட்டி முறைகள் பற்றிய நகல்களை சீனியர் மாணவர்களிடம் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் கல்லூரியின் முதல்வரை தலைவராக கொண்ட ராக்கிங் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியில் துறை தலைவர்கள், சீனியர் ஆசிரியர்கள், சிவில் மற்றும் போலீஸ் நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெறவேண்டும்.

டீன் அறையின் முன்பும், விடுதியிலும் புகார் பெட்டி வைக்கவேண்டும்.

ராக்கிங்கில் ஈடுபட்டால் அளிக்கப்படும் தண்டனை, ராக்கிங் தடுப்பு படையின் செல் நம்பர், வார்டன் செல்போன் ஆகியவை அடங்கிய கையேட்டை மாணவர்களிடம் வழங்கவேண்டும்.

இந்த சுற்றறிக்கை தொடர்பாக மருத்துவக் கல்லூரிகளில் எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையை தொடர்ந்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி உள்பட அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us