தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மருத்துவப் படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு


UPDATED : ஜூலை 25, 2011 12:00 AM

ADDED : ஜூலை 25, 2011 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2011 12:00 AM ADDED : ஜூலை 25, 2011 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில், தற்போது மருத்துவப் படிப்புகளில் சேர மாநில வாரியாகவோ அல்லது பல்கலை வாரியாகவோ தனித்தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இவற்றை முறைப்படுத்தும் நோக்கில், அடுத்த கல்வியாண்டு முதல், முதுநிலை மருத்துவப் படிப்புகள், ஒரு துறையில் நிபுணத்துவம் பெறுவதற்கான மருத்துவ உயர் படிப்புகள் ஆகியவற்றுக்கு இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்திய மருத்துவக் கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின்படி, அடுத்த கல்வியாண்டு முதல் ஒவ்வொரு மே மாதமும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

பொது நுழைவுத் தேர்வு தொடர்பான மேலும் பல விவரங்களும், மாதிரி வினாத்தாள்கள் போன்றவையும் இந்திய மருத்துவக் கவுன்சில் இணையதளத்தில் அடுத்த மாதம் வெளியிடப்படும். இந்த நுழைவுத் தேர்வில் எம்.பி.பி.எஸ். பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

ஏற்கனவே, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வை நடத்துவது என்று மருத்துவக் கவுன்சில் அறிவித்து, அதற்கான பாடங்களையும் பொதுமக்கள் கருத்து கேட்க இணையதளத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us