UPDATED : ஜூலை 25, 2011 12:00 AM
ADDED : ஜூலை 25, 2011 02:52 PM
அ நிறம் | அளவு
ஜுலை 8ம் தேதி துவங்கி ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வில் இதுவரை 50,770 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதில் 9552 பேர் வரவில்லை, 132 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றும், தாங்கள் விரும்பிய பாடம் கிடைக்காததால் எந்த பாடத்தையும் தேர்வு செய்யாமல் திரும்பிச் சென்றுவிட்டனர்.
17 நாட்கள் நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று 41,084 மாணவர்கள் அவர்கள் விரும்பிய பாடப் பிரிவுகளை தேர்வு செய்தனர்.
ஜுலை 24ம் தேதியன்று 3,040 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். 662 மாணவர்கள் கலந்தாய்விற்கு வரவில்லை. 8 பேர் எதையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர். 2370 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவை தேர்வு செய்தனர்.
