அண்ணா பல்கலைக்காக தமிழ் வழி கல்வியை தேர்வு செய்தவர்கள்
அண்ணா பல்கலைக்காக தமிழ் வழி கல்வியை தேர்வு செய்தவர்கள்
UPDATED : ஜூலை 27, 2011 12:00 AM
ADDED : ஜூலை 27, 2011 04:51 PM
பொறியியல் பாடப்பிரிவுகளில் தமிழ் வழி மெக்கானிக்கல் பிரிவில் இதுவரை 67 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் 21 மாணவர்கள் பிளஸ் 2 வரை ஆங்கில வழியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேப்போல, சிவில் இன்ஜினியரிங்கில் சேர்ந்துள்ள 69 பேரில் 13 மாணவர்கள் ஆங்கில வழியில் படித்தவர்களாவர்.
பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்த மாணவர்கள், பொறியியல் பாடப்பிரிவுகளை ஆங்கிலத்தில் படிக்க சிரமமாக இருக்கும் என்பதற்காகத்தான், தமிழ் வழிக் கல்வி முறை பொறியியல் பாடப்பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதுவும், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில், சிவில் இன்ஜினியரிங்கும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மட்டுமே தமிழ் வழியில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் இடம் கிடைக்காத மாணவர்கள், அங்குதான் படிக்க வேண்டும் என்ற ஆவலில், தமிழ் வழிக் கல்வியை தேர்வு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
