இடஒதுக்கீடு குறித்து விவாதம்; மாணவர்களுக்கு அரசு உத்தரவு
இடஒதுக்கீடு குறித்து விவாதம்; மாணவர்களுக்கு அரசு உத்தரவு
UPDATED : ஆக 28, 2015 12:00 AM
ADDED : ஆக 28, 2015 10:46 AM
அ நிறம் | அளவு
அப்போது, கீழ்கண்ட தலைப்புகளில், மாணவர்கள் விவாதம் நடத்த வேண்டும் எனவும், அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
வழங்கப்பட்டுள்ள தலைப்புகள்:
- பேச்சுரிமை முறையாக அமலாகி இருக்கிறதா?
- பழங்குடியினரின் கலாசார மரபுகளை பாதுகாக்கவும், வாழ்க்கை முறையை உயர்த்தவும், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியா?
- கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில், அனைத்து மக்களுக்கும் சமமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா?
- மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, இன்னும் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்க வேண்டுமா?
- சட்டசபை மற்றும் பார்லிமென்டில், எழுத்தளவில் மட்டுமே பெண்களுக்கான உரிமைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதா?
- தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில்,குழந்தைகளை தவறான வழிக்கு திசை திருப்பும் தகவல்களை,எப்படி கட்டுப்படுத்துவது?
- நிலம் இல்லாத, விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும்?
- நுகர்வு திறன் அதிகரிப்பால், மக்களின் வாழ்க்கை முறை மற்றும் முன்னேற்றத்தில், தவறான எதிர்விளைவு ஏற்படுகிறதா?
இந்த தலைப்புகளில், மாணவர்கள் நடத்தும் விவாதங்களை தொகுத்து, சி.பி.எஸ்.இ., தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
