UPDATED : ஆக 31, 2015 12:00 AM
ADDED : ஆக 31, 2015 11:08 AM
அ நிறம் | அளவு
தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன.
இதற்கு, 9,400 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று துவங்குகிறது. அடுத்த மாதம், 2ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் பங்கேற்போர், அசல் சான்றுகளுடன், ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர வேண்டும்.
மேலும், விவரங்களை, www.tnhelth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
