UPDATED : ஆக 31, 2015 12:00 AM
ADDED : ஆக 31, 2015 11:12 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி
: புதுச்சேரி திருவள்ளுவர் கலைக்கூடம்
சார்பில், சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி மாணவ மாணவியருக்கு, ஓடும் ரயிலில்
ஓவிய போட்டி நடந்தது.
புதுச்சேரி
ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4:00 மணிக்கு புறப்பட்ட விழுப்புரம் பயணிகள் ரயிலில், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது. அவுட் லைனிங் ஓவியங்கள்
வரையப்பட்ட தாள் வழங்கினர். இதில் 250 மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.விழுப்புரம் வரை
ஓவியங்கள் வரைந்து சென்று, மாலை 6:30 மணிக்கு, புதுச்சேரி திரும்பினர். அவர்களுக்கு,
பிஸ்கட் தண்ணிர் பாக்கெட்டுகள் வழங்கினர்.
ஏற்பாடுகளை திருவள்ளுவர் கலைக்கூடஉதவி தலைவர் கோவிந்தராஜன், செயலர் சிவக்குமார், செய்திருந்தனர். போட்டி முடிவுகள் செப்., 8 ம் தேதி வெளியிடப்படும் என கூறினர்.
