UPDATED : செப் 02, 2015 12:00 AM
ADDED : செப் 02, 2015 10:45 AM
சென்னை
: மின்னாற்றலுள்ள சறுக்கு பலகையை,
எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக பி.டெக்., மெக்கட்ராஜிக்ஸ்
மாணவர் குழு உருவாக்கி உள்ளது.
இ-போர்ட் என்ற இந்த சறுக்கு பலகை, 120 கிலோ எடையை தாங்கி, மணிக்கு 30 கி.மீ., கத்தில் செல்லும் திறன் கொண்டது. சாதாரண சறுக்கு பலகை போல் அல்லாமல், மிகக் குறைந்த எடையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில், சார்ஜ் செய்து உபயோகிப்பது மட்டுமல்லாமல், இயங்கும்போதே அந்த விசையில் சார்ஜ் ஆகும் வகையில், நவீன தொழில்நுட்பம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அலைபேசி மூலம் இதைக் கட்டுப்படுத்தும் வகையில், மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். கல்லுாரி, பல்கலைக்கழக வளாகங்கள், நிறுவன, வணிக வளாகங்கள், பூங்கா, விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட இடங்களில், இந்த சறுக்கு பலகையை பயன்படுத்தலாம் என, மாணவர்கள் தெரிவித்தனர்.
