UPDATED : செப் 04, 2015 12:00 AM
ADDED : செப் 04, 2015 10:32 AM
சென்னை
: தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின்
தலைவராக இருந்த, முன்னாள் அமைச்சரின் சகோதரர்
நீக்கப்பட்ட நிலையில், புதிய தலைவராக, ஸ்டான்லி மருத்துவமனை எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர்
பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தலைவராக, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர், வி.எஸ்.விஜய்யின், சகோதரர் துரைராஜ் இருந்தார்; ஆகஸ்டில், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம், அவர் நீக்கப்பட்டார்.
இதையடுத்து நடந்த தேர்தலில், டாக்டர் பாலகிருஷ்ணன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணராக உள்ளார்; தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொதுச் செயலராகவும் உள்ளார். துணைத் தலைவராக, டாக்டர் குமுதா லிங்கராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
