UPDATED : செப் 05, 2015 12:00 AM
ADDED : செப் 05, 2015 10:46 AM
மேட்டுப்பாளையம் அடுத்த, காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்பறை ஊராட்சி புதுக்காட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
பொதுமக்கள்
பங்களிப்புடன், 3.50 லட்சம் ரூபாய் செலவில் புதிய
கம்ப்யூட்டர் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இதில், 13 மேஜை கம்ப்யூட்டர்களும், 3 லேப்-டாப்களும்,
எல்.சி.டி., புரஜக்டர் கூடிய திரை, மிகச் சிறந்த
ஒளி, ஒலி, அமைப்புடன்
வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 25 மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் இருக்கை வசதிகள்
உள்ளன.இப்பள்ளியில் தமிழகத்திலேயே முதல் முறையாக, ஆல்டியஸ் தனியார் அறக்கட்டளை சார்பில், இணையதளம் மூலம், கணிதம் கற்பிக்கும் வகுப்புகள்
துவக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கு காரமடை கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
ஆல்டியஸ், நிர்வாகிகள் கீர்த்திவாசன், ஆனந்த் கூறுகையில், சமச்சீர் கல்வி முறையிலான பாடத்திட்டங்களையே, இதில் கற்பிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 4,5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து, அனைத்து வகுப்புகளுக்கும் விரிவாக்கப்படும். இதன் மூலம், 65 மாணவர்கள் பயன் அடைவர் என்றனர்.
