தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி

ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி

ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி


UPDATED : செப் 05, 2015 12:00 AM

ADDED : செப் 05, 2015 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2015 12:00 AM ADDED : செப் 05, 2015 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்
: மாணவர்களுக்கு எளிதாக கணிதம் கற்பிக்க கணித உபகரணப் பெட்டியை கையாள்வது குறித்து ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு மூன்ற நாள் பயிற்சி கடலுாரில் நடந்தது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் கணிதப் பாடத்தை எளிதில் புரிந்து கொள்வதற்கு, கணித உபகரணப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த உபகரணப் பெட்டியை கையாள்வதற்காக கடலுார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவகத்தில் நடந்த 3 நாள் பயிற்சி நிறைவடைந்தது.

இப்பயிற்சிக்காக அரசு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1,425 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.

இவர்கள் குறுவள மையங்கள் மூலம் கடலுாரில் 7 ஒன்றியங்கள், நெய்வேலியில் 7 ஒன்றியங்களிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 4,249 ஆசிரியர்களுக்கு கணித உபகரணப் பெட்டியைக் கையாளும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஒரு பெட்டி வீதம் வழங்கப்படுகிறது. 

நுாறு மாணவர்களுக்கு மேல் இருந்தால் 2 பெட்டிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வித் திட்ட உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்சசெல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us