தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/5,300 காலியிடங்களுக்கு விரைவில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

5,300 காலியிடங்களுக்கு விரைவில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

5,300 காலியிடங்களுக்கு விரைவில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு


UPDATED : செப் 07, 2015 12:00 AM

ADDED : செப் 07, 2015 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2015 12:00 AM ADDED : செப் 07, 2015 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:
 அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 5,300 பணியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வுகள் அறிவிக்கப்படும்என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில், 213 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான, எழுத்துத்தேர்வு நடந்தது. சென்னையில், 28 மையங்கள் உட்பட, எட்டு மாவட்டங்களில், 91 மையங்களில், 27 ஆயிரத்து, 552 பேர் தேர்வு எழுதினர். சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.

பின், பாலசுப்ரமணியன் கூறியதாவது:

உதவி பொறியாளர் தேர்வுக்கான, கீ ஆன்சர் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்; இரு மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும். வி.ஏ.ஓ., - 800; நேர்முகத்தேர்வு

இல்லாத, குரூப்-2 பணியிடங்கள் - 1,700; குரூப்-பணியிடங்கள் - 2,800 என, 5,300 காலியிடங்களுக்கு விரைவில் தேர்வு அறிவிக்கப்படும். சமீபத்தில், 4.78 லட்சம் பேர் எழுதிய, குரூப்-2 தேர்வு முடிவு, இம்மாத இறுதியில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us