தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள்!

கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள்!

கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள்!


UPDATED : செப் 10, 2015 12:00 AM

ADDED : செப் 10, 2015 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2015 12:00 AM ADDED : செப் 10, 2015 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
:
 மாணவர்களை நல்வழிப்படுத்த அண்ணா பல்கலை இணைவிப்பு கல்லுாரிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்ற அரசு பதிலை ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை, இதுகுறித்த வழக்கை முடித்து வைத்தது.

மதுரை வழக்கறிஞர் ஞானகுருநாதன் தாக்கல் செய்த பொது நல மனு: கல்லுாரி மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதால், தவறுகள் செய்ய நேர்கிறது. இதனால், தண்டனைக்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதைத் தடுக்க ஒவ்வொரு பாடப்பிரிவிலும் பொறுப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

அதிக விடுப்பு எடுக்கும் மாணவர்களை கண்காணித்து, அறிவுரை வழங்க வேண்டும். குறைந்த பட்ச வருகைப்பதிவு இல்லாவிடில், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு மாணவர்களுடன் இணக்கமாக பேசி தீர்வு காண, மூத்த பேராசிரியரை உளவியல் ஆலோசகராக நியமிக்க வேண்டும் என மாநில கல்லுாரிக் கல்வி இயக்குனர் 2011 மே 25ல் உத்தரவிட்டார். மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக 2013ல் 17 வழக்குகள் பதிவாகின. துாத்துக்குடியில் தனியார் கல்லுாரி முதல்வர் கொலை செய்யப்பட்டார். அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ஞானகுருநாதன் மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி அமர்வு விசாரித்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் பாஸ்கர பாண்டியன், மனநல ஆலோசகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இணைவிப்பு கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அண்ணா பல்கலையின் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கோவை மண்டலங்களில் நடுநிலை அறிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள், இணைவிப்பு கல்லுாரிகளில் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கின்றனரா? என ஆய்வு செய்கின்றனர்என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us